உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / புறவழிச்சாலை உள்வாங்கியதால் வாகன ஓட்டிகள் அச்சம்

புறவழிச்சாலை உள்வாங்கியதால் வாகன ஓட்டிகள் அச்சம்

விருத்தாசலம்: மங்கலம்பேட்டை புறவழிச்சாலை உள்வாங்கியதால், வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர்.கடலுார் - திருச்சி, சிதம்பரம் - சேலம், சென்னை -- ஜெயங்கொண்டம் மார்க்கத்தில் விருத்தாசலம் முக்கிய சந்திப்பு. அதில், கடலுார் - விருத்தாசலம் - சின்னசேலம் கூட்டுரோடு வரை (சி.வி.எஸ்., சாலை) தேசிய நெடுஞ்சாலையாக தரம் உயர்த்தப்பட்டு விரிவாக்கம் செய்யப்பட்டது.ஆனால், விருத்தாசலம் வழியாக உளுந்துார்பேட்டை, விழுப்புரம், சென்னை மார்க்கமாக செல்லும் வாகனங்கள், விருத்தாசலம் - உளுந்துார்பேட்டை இடையே உள்ள 22 கி.மீ., துார நெடுஞ்சாலையை கடந்து செல்ல மிகுந்த சிரமமடைந்தனர்.இதையடுத்து, சென்னை -- கன்னியாகுமரி தொழிற்தட சாலை திட்டத்தில், ஆசிய வளர்ச்சி வங்கி நிதியுதவியுடன் விருத்தாசலம் - உளுந்துார்பேட்டை இடையே 22.85 கி.மீ., தொலைவிற்கு 136 கோடி ரூபாய் நிதியில் சீரமைப்பு பணிகள் நடந்து முடிந்தது.அதில், மங்கலம்பேட்டை நகருக்குள் செல்வதை தவிர்க்கும் வகையில், ரூபநாராயணநல்லுார் சமத்துவபுரத்தில் இருந்து 5 கி.மீ., துாரத்திற்கு புதிதாக புறவழிச்சாலையும் போடப்பட்டது. இதன் மூலம் நெடுந்துார வாகனங்கள் நெரிசலின்றி செல்கின்றன.இருப்பினும் தரமின்றி போடப்பட்ட புறவழிச்சாலையில் ஆங்காங்கே உள்வாங்கி, போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலைக்கு மாறியுள்ளது. வடகிழக்கு பருவமழை துவங்குவதால் தரமில்லாத புறவழிச்சாலை முற்றிலும் பெயர்ந்து விபத்து அபாயமாக மாறும் நிலை ஏற்பட்டுள்ளது. இது வாகன ஓட்டிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ