நகராட்சி நிர்வாக இயக்குனர் ஆய்வு
திட்டக்குடி: திட்டக்குடியில் நடந்து வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை மண்டல நகராட்சி நிர்வாக இயக்குனர் ஆய்வு செய்தார். திட்டக்குடி நகராட்சியில் ரூ. 5 கோடி மதிப்பில் அரசு மருத்துவமனை கட்டடம் கட்டும் பணி, புதிய மார்க்கெட் கட்டடம், பஸ் நிலையத்தில் தரைத்தளம் உட்பட பல வளர்ச்சி திட்டப் பணிகள் நடந்து வருகிறது. இப்பணிகளை செங்கல்பட்டு மண்டல நகராட்சி நிர்வாக இயக்குனர் லட்சுமி ஆய்வு செய்தார். அப்போது, பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினார். ஆய்வின்போது, நகராட்சி கமிஷனர் முரளிதரன், பொதுப்பணி மேற்பார்வையாளர் சாம்பசிவம் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.