உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சப் கலெக்டர் ஆபீசில் மா.கம்யூ., தர்ணா

சப் கலெக்டர் ஆபீசில் மா.கம்யூ., தர்ணா

சிதம்பரம் : செங்கல் சூளையில் தொழிலாளர்களை கொத்தடிமையாக நடத்திய உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரி, சிதம்பரம் சப் கலெக்டர் அலுவலகத்தில் மா.கம்யூ., கட்சியினர் தர்ணா போராட்டம் நடத்தினர்.திருவாரூர் அடுத்த திருசேறை கிராமத்தில், செல்வகுமாருக்கு சொந்தமான செங்கல் சூளையில் சிதம்பரம் அடுத்த உடையான்மேடு கிராமத்தைச் சேர்ந்த பாலாஜி மற்றும் இவரது மனைவி கொத்தடிமையாக நடத்தப்பட்டதாகவும், எனவே, செல்வகுமார் மீது நடவடிக்கை கோரி சிதம்பரம் சப் கலெக்டர் அலுவலகத்தில் மா.கம்யூ., கட்சி சார்பில் தர்ணா போராட்டம் நடந்தது. பரங்கிப்பேட்டை தெற்கு ஒன்றிய செயலாளர் ஆழ்வார் தலைமையில், மாநில குழு உறுப்பினர் ரமேஷ்பாபு, மாவட்ட செயற்குழு உறுப்பினர் வாஞ்சிநாதன் மற்றும் இருளர் சமூக மக்கள் பங்கேற்றனர். ஆதிதிராவிடர் நலத்துறை தாசில்தார் சத்யன் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி, நடவடிக்கை எடுப்பதாக உறுயளித்ததன் பேரில், அவர்கள் கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி