உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / அரசு மருத்துவமனைகளில் வசதி மா.கம்யூ., வலியுறுத்தல்

அரசு மருத்துவமனைகளில் வசதி மா.கம்யூ., வலியுறுத்தல்

பெண்ணாடம்: அரசு மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகளக்கு போதிய மருத்துவ வசதி செய்து தர வேண்டும் என, மா.கம்யூ., வலியுறுத்தி உள்ளது. பெண்ணாடத்தில், திட்டக்குடி மா.கம்யூ., வட்டக்குழு சார்பில் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்திற்கு, வட்டக்குழு உறுப்பினர் வரதன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் மாதவன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் பிரகாஷ், வட்ட செயலாளர் அன்பழகன் முன்னிலை வகித்தனர். மாவட்ட குழு உறுப்பினர் முத்துலட்சுமி வரவேற்றார். வட்டக்குழு உறுப்பினர்கள் மாணிக்கவேல், விஸ்வநாதன், சுமதி, அரவிந்தன், பாரதன், முத்துலட்சுமி, ஹரிபாபு உட்பட பலர் பங்கேற்றனர். இதில், பெண்ணாடம் மற்றும் திட்டக்குடி அரசு மருத்துவமனைகளு க்கு வரும் நோயாளிகளுக்கு போதிய மருத்துவ வசதி செய்து தர வேண்டும்; பெ.பொன்னேரி மேம்பாலம் முகப்பில் உள்ள ரவுண்டானாவை சீரமைத்து, ைஹமாஸ் விளக்கு அமைக்க வேண்டும்; இக்கோரிக்கைகள் நிறைவேற்றாவிட்டால் விரைவில் மறியல் போராட்ட ம் நடத்துவது; என்பன உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை