உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / நகராட்சி தூய்மை பணியாளர்கள் பணியை புறக்கணித்து போராட்டம்

நகராட்சி தூய்மை பணியாளர்கள் பணியை புறக்கணித்து போராட்டம்

விருத்தாசலம்: விருத்தாசலம் நகராட்சி துாய்மை பணியாளர்கள், பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. விருத்தாசலம் நகராட்சியில் 113 ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் கடந்த 14 ஆண்டாக பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு, இ.எஸ்.ஐ., பிடித்தம் செய்த தொகையை வழங்க வேண்டும். இ.எஸ்.ஐ., அடையாள அட்டை, ஊதிய உயர்வு, பாதுகாப்பு உபகரணங்கள், உணவு படி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, நேற்று காலை நகராட்சி அலுவலகம் முன், உழைப்போர் உரிமை இயக்கம் (ஏ.ஐ.சி.சி.டி.யு.,) சார்பில், உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் சேர்மன் சங்கவி, கமிஷனர் நாகராஜ் ஆகியோர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். அதனையேற்று துாய்மை பணியாளர்கள் அனைவரும் போராட்டத்தை கைவிட்டு, கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை