உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / குறிப்புகள் இன்றி அருங்காட்சியக சிலைகள்

குறிப்புகள் இன்றி அருங்காட்சியக சிலைகள்

கடலுார் மஞ்சக்குப்பம் பழயை கலெக்டர் அலுவலகத்தில் ஒரு பகுதியில் அரசு அருங்காட்சியகம் இயங்கி வருகிறது. இங்கு மாவட்ட வரலாறு, கலாசாராம், அரிய வகை தாவரங்கள், விலங்குகள், பழமையான கல் சிற்பங்கள் போன்றவை காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. பல்வேறு மாவட்டங்களில் இருந்து பள்ளி, கல்லுாரி மாணவர்கள் ஆய்வாளர்கள் பார்வையிட்டு செல்கின்றனர்.இந்நிலையில், அருங்காட்சியகம் ரூ. 50 லட்சம் மதிப்பில், சீரமைப்பு பணிகள் நடந்தது. அருங்காட்சியகம் நுழைவு வாயிலில், கான்கிரீட் மூலம் பீடம் அமைக்கப்பட்டு, சிலைகள் நிறுவப்பட்டுள்ளது. இந்த சிலைகள் குறித்த தகவல்கள் அங்கு குறிப்பேடாக எதுவும் வைக்கவில்லை. இதனால், அந்த சிலை எத்தனை ஆண்டுகள் பழமையானது, அதன் பெயர் உள்ளிட்ட விவரங்களை மாணவர்கள் தெரிந்து கொள்ள முடியாத நிலை உள்ளது. சிலைகளின் அருகில் எத்தனை ஆண்டுகள் பழமையானது, சிலைகளின் பெயர் உள்ளிட்ட குறிப்புகள் வைத்தால் பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை