ஆருத்ரா தரிசனத்தையொட்டி நந்தனார் சிலை ஊர்வலம்
சிதம்பரம் : சிதம்பரம் நடராஜர் கோவிலில், ஆருத்ரா தரிசனத்தையொட்டி, 63 நாயன்மார்களில் ஒருவரான நந்தனார் சிலை ஊர்வலம் நடந்தது.நிகழ்ச்சிக்கு நந்தனார் கல்விக் கழக தலைவர் மணிரத்தினம் தலைமை தாங்கினார். செயலாளர் திருவாசகம், பொருளாளர் ஜெயச்சந்திரன், உறுப்பினர் கற்பனைச்செல்வம், நந்தனார் கல்வி கழக நிர்வாக கமிட்டி செயலாளர் வினோபா, தலைவர் பன்னீர்செல்வம், நிர்வாகிகள் இளைய அன்பழகன், கொத்தவாசல் அன்பழகன், நந்தனார் கல்வி கழக முன்னாள் தலைவர் சங்கரன், காங்., முன்னாள் ஒன்றிய சேர்மன் செந்தில்குமார் மற்றும் கஜேந்திரன், நந்தனார் பெண்கள் பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ஜெயராமன் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.நந்தனார் ஊர்வலம் ஓமக்குளத்தில் உள்ள நந்தனார் மடத்திலிருந்து மேல தாளம் முழங்க ஊர்வலமாக சென்று சிதம்பரம் நகரின் தேரோடும் வீதிகளில் சென்று மீண்டும் நந்தனார் மடத்தை அடைந்தது.