உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / அரசு மருத்துவமனைக்கு தேசிய தரச்சான்றிதழ்

அரசு மருத்துவமனைக்கு தேசிய தரச்சான்றிதழ்

கடலுார் : கடலுார் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை, 92சதவீதம் மதிப்பெண்களுடன் மூன்று தேசிய தரச்சான்றிதழ் பெற்றுள்ளது.கடலுார் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில், கடந்த ஆண்டு மார்ச் 28ம் தேதி முதல் 30ம் தேதி வரை தேசிய தரச்சான்று குழுவினர் ஆய்வு செய்தனர். மகப்பேறு மற்றும் குழந்தைகள் சிகிச்சை பிரிவு உட்பட 20 பிரிவுகளில் ஆய்வு நடத்தப்பட்டது.இதன் முடிவுகள் ஜூலை மாதத்தில் வெளியான நிலையில், கடலுார் அரசு தலைமை மருத்துவமனை 92சதவீத மதிப்பெண்களுடன் தேசிய தர உறுதி தர நிலைகள், பிரசவ அறை தர மேம்பாட்டு முயற்சி, குழந்தை சுகாதார சேவைகளின் தரம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான நோக்கம் ஆகிய மூன்று தரத்திட்டங்களில் தேறியதாக அறிவிக்கப்பட்டது. நேற்று சென்னை கிண்டியில் உள்ள எம்.ஜி.ஆர்., பல்கலைகழகத்தில் நடந்த விழாவில் சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன், கடலுார் அரசு தலைமை மருத்துவமனைக்கான தேசிய தரச்சான்றுகளை மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் அசோக்பாஸ்கரிடம் வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை