மேலும் செய்திகள்
மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டி
18-Oct-2025
விருத்தாசலம்: விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, பிளஸ் 1 மாணவர் கவுசிக், தேசிய சாப்ட் பால் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டார். இந்திய பள்ளிகள் விளையாட்டுக் குழுமம், 2025 - 26ம் கல்வியாண்டிற்கான மாநில அளவிலான, 14, 17, 19 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் சாப்ட் பால் தேர்வுப் போட்டி நடத்தியது. அதில் பங்கேற்று, 19 வயதுக்கு உட்பட்டோர் பிரிவிற்கான போட்டியில், விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர் கவுசிக், மாநில போட்டிக்கு தகுதி பெற்றார். கடந்த 6ம் தேதி, ராணிப்பேட்டை மாவட்டத்தில் நடந்த தேசிய அளவிலான போட்டியில் வெற்றி பெற்றார். அதைத் தொடர்ந்து, சாப்ட் பால் போட்டிக்கு தமிழக அணி சார்பில் மாணவர் கவுசிக் தேர்வு செய்யப்பட்டு, தேசிய போட்டிக்கு தகுதி பெற்றார். அவருக்கு, ராணிப்பேட்டை மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் செந்தில்குமார் சான்றிதழ் வழங்கி, வாழ்த்து தெரிவித்தார். மேலும், வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பள்ளி தலைமை ஆசிரியர் வினோத்குமார், உதவி தலைமை ஆசிரியர்கள் ஜெயராணி, விஜயலட்சுமி, உடற்கல்வி ஆசிரியர்கள் ராஜராஜசோழன், பிரகாசம், மனோகர் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.
18-Oct-2025