உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / தேசிய புள்ளியியல் துறை மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி

தேசிய புள்ளியியல் துறை மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி

கடலுார் : கடலுார், திருப்பாதிரிப்புலியூர் சுப்புராய செட்டித் தெருவில் இயங்கும் தேசிய புள்ளியியல் துறையின் கடலுார் துணை வட்டார அலுவலகம் சார்பில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடந்தது.மாநகராட்சி 31வது வார்டு அண்ணாமலை நகர் பூங்காவில் நடந்த நிகழ்ச்சியில் துணை வட்டார அலுவலக முதுநிலை அதிகாரி சுரேஷ்குமார் தலைமை தாங்கினார். அப்போது அவர் பேசுகையில், 'தேசிய புள்ளியியல் துறை மூலமாக இந்தியா முழுதும் பல்வேறு மாதிரி கணக்கெடுப்பு பணி எடுக்கப்படுகிறது. இதனை பொதுமக்களுக்கு தெரியப்படுத்தும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. இதுபோன்ற சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி மூலமாக மக்களுக்கு புள்ளியியல் துறையின் செயல்பாடுகள் மற்றும் கணக்கெடுப்புகள் பற்றிய புரிதல் ஏற்படும். இந்த கணக்கெடுப்பு மூலமாக பெறப்படும் தகவல்கள் நாட்டின் வளர்ச்சிக்கும், மேம்பாட்டு திட்டங்களை உருவாக்கவும் பயன்படும். எனவே, இத்துறை மூலம் எடுக்கப்படும் கணக்கெடுப்பு பணிகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்' என்றார்.நிகழ்ச்சியில், மாநகராட்சி கவுன்சிலர் ஷாய் துன்னிசா சலீம், புள்ளியியல் துறை அலுவலர்கள், ஓய்வுபெற்ற அரசு அலுவலர்கள், அண்ணாமலை நகர் குடியிருப்போர் நலச்சங்க நிர்வாகிகள், பொதுமக்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை