தேசிய ஒருமைப்பாட்டு தினம்
கடலுார்: நெல்லிக்குப்பம் அடுத்த வாழப்பட்டு வள்ளி விலாஸ் ஆலயா சி.பி.எஸ்.இ., பள்ளியில் தேசிய ஒருமைப்பாட்டு தின விழா நடந்தது. பள்ளி முதல்வர் சீனுவாசன், தாளாளர் இந்துமதி சீனுவாசன் தலைமை தாங்கினர். உதவி தலைமை ஆசிரியர் மீனா ராஜேந்திரன், கல்வி ஒருங்கிணைப்பாளர் ரமேஷ் பா பு வாழ்த்திப் பேசினர். விழாவில், மாணவர்கள் 28 மாநிலங்களின் பாரம்பரிய உடைகள் அணிந்து மேடையில் அணிவகுத்து வந்தனர். மாணவர்களுக்கு ஒருமைப்பாட்டு உறுதி மொழியும் கூறப்பட்டது. இந்தியாவின் சிறப்பு மற்றும் பன்முகத்தன்மை குறித்து மாணவர்கள் எடுத்து கூறினர்.