உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / நாட்டு நலப்பணி திட்ட முகாம் நிறைவு விழா

நாட்டு நலப்பணி திட்ட முகாம் நிறைவு விழா

சிதம்பரம்: சிதம்பரம் நந்தனார் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியின், நாட்டு நலப்பணித் திட்ட முகாம் நிறைவு விழா சுவாமி சகஜானந்தா மணிமண்டபத்தில் நடந்தது. தலைமை ஆசிரியை எழிலரசி தலைமை தாங்கினார். பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் ஜெயராமன், உதவி தலைமை ஆசிரியர் ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தனர், சிறப்பு விருந்தினர் இன்னர்வீல் சங்க தலைவி கோமதி கோவிந்தராஜன், வரலட்சுமி கேசவன் ஆகியோர் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படக்கூடிய தீமைகள் குறித்து பேசினர். தொடர்ந்து, சுற்றுப்புற சூழல் மாசுபடாமல் இருக்க துணி பைகளை பயன்படுத்த வேண்டும் என வலியுறுத்தி, அனைவருக்கும் துணி பைகள் வழங்கினர். மக்கும் குப்பை, மக்காத குப்பை பற்றி மாணவிகளுக்கு இடையே வினாடி வினா போட்டி நடத்தி பரிசு வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித் திட்ட உதவி அலுவலர் கலாராணி செய்திருந்தார். ஆசிரியை உஷாராணி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !