உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / நாட்டு நலப்பணித் திட்ட கலந்தாய்வு கூட்டம்

நாட்டு நலப்பணித் திட்ட கலந்தாய்வு கூட்டம்

கடலுார் : கடலுார் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில், நாட்டு நலப்பணித்திட்ட கலந்தாய்வு கூட்டம் மற்றும் சான்றிதழ் வழங்கும் விழா நடந்தது. மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் எல்லப்பன் தலைமை தாங்கினார். மாவட்டத்தில் நாட்டு நலப்பணித் திட்டம் பள்ளிகளில் செயல்படும் விதம், பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்தில் அனைத்து மேல்நிலைப்பள்ளிகளிலும் நாட்டு நலப்பணித்திட்டம் துவங்கவும், போதை பழக்கத்தை ஒழிக்கவும் உறுதிமொழி ஏற்பும், நோய் தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்துதல் குறித்து அறிவுறுத்தப்பட்டது. சிறப்பாக பணியாற்றிய நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்களுக்கு, சான்றிதழ் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை மாவட்ட தொடர்பு அலுவலர்கள் பழனியப்பன், சுந்தர் ராஜன் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி