உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்கள் ஆலோசனை

நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்கள் ஆலோசனை

கடலுார்: கடலுார் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில், மாவட்ட நாட்டுநலப்பணித்திட்ட அலுவலர்கள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. முன்னாள் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் திருமுகம், முதன்மைக்கல்வி அலுவலக கண்காணிப்பாளர் தேவமுரளி முன்னிலை வகித்தனர். புனித வளனார் பள்ளி நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் சுரேஷ்ராஜன் வரவேற்றார். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் எல்லப்பன், பள்ளி காலாண்டு விடுமுறையில் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் மற்றும் மாணவர்கள், தாங்கள் தத்தெடுத்த கிராமங்களுக்கு சென்று தங்கி சேவை புரிய வேண்டும். மாவட்டத்தில், 10ஆயிரம் மரக்கன்றுகள் நட வேண்டும் என பேசினார். மேலும் போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி, சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம், நீர் மேலாண்மை, திடக்கழிவு மேலாண்மை பற்றிய விழிப்புணர்வு, மருத்துவ முகாம், கால்நடைகள் பராமரிப்பு முகாம், டெங்கு மலேரியா தடுப்பு நடவடிக்கை, சைபர் கிரைம், போக்சோ சட்டம் குறித்த விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டனர். ஏற்பாடுகளை மாவட்ட தொடர்பு அலுவலர்கள் பழனியப்பன், சுந்தர் ராஜன் செய்திருந்தனர். அரசுப்பள்ளி திட்ட அலுவலர் மோகன்குமார் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ