மேலும் செய்திகள்
கைலாசநாதர் கோவிலில் திருவிளக்கு பூஜை
08-Sep-2025
நடுவீரப்பட்டு : நடுவீரப்பட்டு காமாட்சி அம்மன் கோவிலில் நவராத்திரி பூஜை நடந்து வரு கிறது. நடுவீரப்பட்டு காமாட்சியம்மன் சமேத கைலாசநாதர் கோவிலில் நவராத்திரி பூஜை கடந்த 22ம் தேதி துவங்கியது. இதனை முன்னிட்டு தினமும் மாலை விநாயகர், காமாட்சி அம்மன் சமேத கைலாசநாதர் உள்ளிட்ட அனைத்து சுவாமிகளுக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்து வருகிறது. இரவு 7:00 மணிக்கு கொலு மண்டபத்தில் காமாட்சி அம்மனுக்கு தீபாராதனை நடக்கிறது. வரும் 2ம் தேதி விஜயதசமியை முன்னிட்டு அம்பு உற்வசம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை ஆலய நிர்வாக அறங்காவலர் வைத்திலிங்கம் தலைமையிலான விழாக்குழு மற்றும் உபயதாரர்கள் செய்து வருகின்றனர்.
08-Sep-2025