உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சரஸ்வதி பள்ளியில் நவராத்திரி விழா

சரஸ்வதி பள்ளியில் நவராத்திரி விழா

விருத்தாசலம்: விருத்தாசலம் சரஸ்வதி வித்யாலயா மெட்ரிக் பள்ளியில், நவராத்திரி கொலு பூஜை துவங்கியது. விருத்தாசலம், ஆலிச்சிகுடி சாலையில் உள்ள ஸ்ரீ சரஸ்வதி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், நவராத்திரி விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி பள்ளி கலையரங்கில் நவராத்திரி கொலு மேடை அமைத்து, சுவாமிகள், பல்வேறு பொம்மைகள் வைத்து சிறப்பு பூஜைகள் நடந்தது. விழாவில், டாக்டர் இ.கே., கல்விக்குழும நிறுவன டாக்டர் தலைவர் சுரேஷ், மாணவர்கள் கல்வியில் சிறக்க வாழ்த்து தெரிவித்தார். பள்ளி தாளாளர் இந்துமதி சுரேஷ், பொருளாளர் அருண்குமார், பள்ளி முதல்வர் சக்திவேல் உட்பட ஆசிரியர்கள், அலுவலர்கள் பங்கேற்றனர். தொடர்ந்து, ஆயுதபூஜையொட்டி பள்ளி வாகனங்களுக்கு படையலிட்டு, ஓட்டுனர்களுக்கு இனிப்பு, சீருடை வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை