உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  புதிய ரேஷன் கடை பணி துவக்கம்

 புதிய ரேஷன் கடை பணி துவக்கம்

விருத்தாசலம்: மங்கலம்பேட்டை அடுத்த கர்னத்தம் கிராமத்தில், புதிய ரேஷன் கடை கட்டும் பணி துவங்கியது. நிகழ்ச்சிக்கு, விருத்தாசலம் பி.டி.ஓ., லட்சுமி தலைமை தாங்கினார். துணை பி.டி.ஓ., விஜயகுமார், தி.மு.க., ஒன்றிய பொருளாளர் கோவிந்தசாமி, இளைஞரணி அமைப்பாளர் திருஞானம் முன்னிலை வகித்தனர். ஊராட்சி செயலாளர் மணிமேகலை வரவேற்றார். தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில், ரூ.10.15 லட்சம் மதிப்பில், புதிய ரேஷன் கடை கட்டும் பணியை, ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார். பின்னர், கிராம மக்களிடம் குறைகள் கேட்டறிந்து, மனுக்கள் பெற்றார். பேரூராட்சி துணைத் தலைவர் வேல்முருகன், முன்னாள் ஊராட்சித் தலைவர்கள் வெங்கடேசன், ஜெயச்சந்திரன், கோவிந்தராஜ், வி.சி., சுப்புஜோதி, காங்., வட்டார தலைவர் ராவணன் உடனிருந்தனர். ஊராட்சி செயலாளர் சக்திவேல் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ