உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ஷூக்களில் புகுந்த நல்ல பாம்புகள்

ஷூக்களில் புகுந்த நல்ல பாம்புகள்

கடலுார் : கடலுார் அருகே இரு இடங்களில் ஷூக்களில் புகுந்த நல்ல பாம்புகளை வன ஆர்வலர் பிடித்து காட்டில் விட்டார்.கடலுார் அடுத்த சின்ன காரைக்காடு கிராமத்தை சேர்ந்தவர் விஜயபாலன்; சிப்காட் ஒப்பந்ததாரர். இவரது வீட்டிற்கு நேற்று முன்தினம் இரவு பாம்பு ஒன்று வந்துள்ளது. இதைக்கண்ட அவர் பாம்பை துரத்தியபோது, காலணிகள் வைக்கும் பகுதிக்கு சென்று மாயமானது. இதை தொடர்ந்து வன ஆர்வலர் செல்லாவுக்கு விஜயபாலன் தகவல் தெரிவித்தார்.அங்கு வந்த செல்லா, காலணிகள் வைக்கும் பகுதியில் இருந்த ஷூக்களை எடுத்துப் பார்த்தார். அப்போது, வீட்டில் பள்ளி குழந்தைகள் பயன்படுத்தும் ஷூவில் 4 அடி நீளம் நல்ல பாம்பு பதுங்கி இருந்தது தெரியவந்தது. அந்த பாம்பை பிடித்த செல்லா, காப்பு காட்டில் விட்டார். இதேபோல் கடலுார், வெளிசெம்மண்டலத்தை சேர்ந்த ஜெயராமன் என்பவரின், வீட்டில் இருந்த ஷூவில் 2 அடி நிள நல்ல பாம்பு இருந்தது. தகவலறிந்த வன ஆர்வலர் செல்லா, நல்ல பாம்பை மீட்டு காட்டில் விட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ