உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / என்.எல்.சி., - பி.எம்.எஸ்., புதிய நிர்வாகிகள் தேர்வு

என்.எல்.சி., - பி.எம்.எஸ்., புதிய நிர்வாகிகள் தேர்வு

நெய்வேலி : நெய்வேலியில் என்.எல்.சி.,- பாரதிய மஸ்தூர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் வட்டம் 27 ல் உள்ள பி.எம்.எஸ் அலுவலகத்தில் நடந்தது.தமிழக மஸ்தூர் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் பாலசுப்ரமணியன் தலைமை தாங்கினார், மாநில அமைப்புச் செயலாளர் தங்கராஜ் முன்னிலை வகித்தார், தேர்தல் அதிகாரியாக மாநில துணைப் பொதுச் செயலாளர் செந்தில் பாண்டியன் தலைமையிலான தேர்தல் குழுவினர் என்.எல்.சி.,-பாரதீய மஸ்தூர் சங்கத்தின் புதிய நிர்வாகிகளை தேர்வு செய்து அறிவித்தனர்.இதில் சங்க தலைவராக வீர வன்னிய ராஜா, செயல் தலைவராக அன்பழகன், பொதுச் செயலாளராக சகாதேவராவ், பொருளாளராக தியாகராஜன், அமைப்புச் செயலாளராக ராஜ், அலுவலக செயலாளராக சண்முகம், துணைத் தலைவர்கள் கிருஷ்ணன், மோகன்தாஸ், ராஜாரவி வர்மா, கருப்பன், கிருஷ்ணமூர்த்தி, சாந்தா ராம் மற்றும் செயலாளர்கள் ராஜேந்திர குமார், வால்ட்டர், வடிவேல், மீனாட்சிசுந்தரம், சரவணமுத்து, சேகர், ராமலிங்கம் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.புதிய நிர்வாகிகள் வர இருக்கும் ரகசிய ஓட்டெடுப்பில் முதன்மை சங்கமாக வருவதற்கான களப்பணியாற்ற வேண்டும், ஒப்பந்த மற்றும் சொசைட்டி தொழிலாளர்களை உடனடியாக பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ