உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / என்.எல்.சி., ஊழியர் - மாற்றுத்திறனாளி கலெக்டர் ஆபீசில் தீக்குளிக்க முயற்சி

என்.எல்.சி., ஊழியர் - மாற்றுத்திறனாளி கலெக்டர் ஆபீசில் தீக்குளிக்க முயற்சி

கடலுார்: கடலுார் கலெக்டர் அலுவலகத்தில் இரண்டு பேர் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது. கடலுார் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைகேட்பு கூட்டம் நேற்று, நடந்தது. அப்போது, நெய்வேலி என்.எல்.சி., சுரங்கத்தில் டெக்னீசியனாக பணிபுரியும் நெய்வேலி, டவுன்ஷிப் ராஜேந்திரன், 54; என்பவர், மனு அளித்து விட்டு வெளியே வந்தார். அப்போது, திடீரென தன் மீது பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். உடன், பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், அவரை மீட்டு விசாரணை நடத்தினர். இதில், என்.எல்.சி., நிர்வாகம் தன்னை பணியில் இருந்து விடுவிப்பதை கண்டித்து தற்கொலைக்கு முயன்றது தெரிந்தது. இதையடுத்து அவரை போலீசார் எச்சரித்து அனுப்பினர். மற்றொரு சம்பவம்: கலெக்டர் நுழைவு வாயில் அருகில், பண்ருட்டி அடுத்த சிறுவத்துாரைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி ராஜசேகர், தன் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், அவரை மீட்டு விசாரணை நடத்தினர். மூன்று சக்கர வாகனம் கேட்டு கலெக்டர் அலுவலகத்தில் பல முறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காததை கண்டித்து தற்கொலைக்கு முயன்றது தெரிந்தது. அவரை போலீசார் எச்சரித்து அனுப்பினர். இந்த இரு சம்பவங்கள் குறித்தும் புதுநகர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ