உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / என்.எல்.சி., சுற்றுச்சூழல் துறைக்கு விருது

என்.எல்.சி., சுற்றுச்சூழல் துறைக்கு விருது

நெய்வேலி : புதுடில்லியில் நடந்த மாநாட்டில் நெய்வேலி என்.எல்.சி., சுற்றுச்சூழல் துறைக்கு விருது வழங்கப்பட்டது. புதுடில்லியில் 24வது உலகளாவிய சுற்றுச்சூழல் மற்றும் நிலைத்தன்மை உச்சி மாநாடு நடந்தது. மாநாட்டில் கடலுார் மாவட்டம், நெய்வேலி என்.எல்.சி., யின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு துறைக்கு, இந்திய அளவில் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் சிறப்பான செயல்பாட்டிற்காகவும், குறிப்பிடத்தக்க சாதனைக்காகவும் 2025ம் ஆண்டின் 24வது கிரீன்டெக் சுற்றுச்சூழல் என்ற உயரிய விருது வழங்கப்பட்டது.அசாம் முன்னாள் கவர்னர் ஜகதீஷ் முகி, விருது வழங்க என்.எல்.சி., இந்தியா நிறுவனத்தின் சுற்றுச்சூழல் துறை செயல் இயக்குநர் அன்புச்செல்வன் பெற்றுக் கொண்டார். விருது பெற்ற குழுவினர் என்.எல்.சி., சேர்மன் பிரசன்னகுமார்ோட்டுபள்ளியிடம், விருது வழங்கி வாழ்த்து பெற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை