உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ஆக்கிரமிப்பு அகற்ற அவகாசம் கிடையாது நெடுஞ்சாலைத்துறை திட்டவட்டம்

ஆக்கிரமிப்பு அகற்ற அவகாசம் கிடையாது நெடுஞ்சாலைத்துறை திட்டவட்டம்

க டலுார் - மடப்பட்டு சாலை விரிவாக்கத்தின் ஒரு பகுதியாக நெல்லிக்குப்பத்தில் சாலை விரிவாக்க பணிகள் நடந்தது. அப்போது சாலையின் இருபுறமும் மழைநீர் வடிகால் வாய்க்கால் அமைத்து கான்கிரீட் சிலாப் போட்டு மூடினர். அதை நடைபாதையாக மக்கள் பயன்படுத்தினர். நாளடைவில் நடைபாதையை கடைகாரர்கள் ஆக்கிரமிப்பு செய்தனர். இதனால் விபத்துகள் நடப்பதால் ஆக்கிரமிப்புகளை அகற்ற போவதாக நெடுஞ்சாலைத்துறையினர், கடைகாரர்களுக்கு நோட்டீஸ் வழங்கினர். இந்நிலையில், வர்த்தகர்கள் முன்னேற்ற சங்கத்தினர்'வடகிழக்கு பருவமழை துவங்க உள்ளதால் ஆக்கிரமிப்புகளை அகற்ற போதிய அவகாசம் வழங்க வேண்டுமென' நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளிடம் மனு அளித்தார். இந்த மனுவுக்கு அதிகாரிகள் அளித்த பதில் கடிதத்தில், 'கடந்த ஆண்டும் ஆக்கிரமிப்பு அகற்ற முயன்ற போது அவகாசம் வழங்க வேண்டும் கேட்டு மனு அளித்தீர்கள். ஆனால் ஆக்கிரமிப்புகளை இதுவரை அகற்ற நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போதும் மனு அளித்துள்ளீர்கள். அடிக்கடி விபத்துகள் நடப்பதால் ஆக்கிரமிப்பு அகற்றுவது கட்டாயமாகிறது. எனவே ஆக்கிரமிப்பு அகற்ற கால அவகாசம் வழங்க முடியாது' என கூறியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி