பயணப்படி கிடைக்காமல் போலீசார் புலம்பலோ புலம்பல்
தமிழகத்தில் நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஒவ்வொரு தேர்தலின் போதும், தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசாருக்கு பயணப்படி வழங்கப்படும்.அந்த வகையில், தற்போது நடந்து முடிந்த லோக்சபா தேர்தலுக்கு, கடந்த மார்ச் 16ம் தேதி முதல் ஜூன் 6ம் தேதி வரை 83 நாட்களுக்கு தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசாருக்கு பயணப்படி வழங்க தமிழக அரசு கடந்த ஏப்ரல் மாதமே ஒப்புதல் அளித்து அரசாணை பிறப்பித்தது.ஆனால், இதுநாள் வரை போலீசாருக்கு பயணப்படி வழங்கப்படவில்லை. இதனால், தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் இடையே, பயணப்படி கிடைக்குமா, கிடைக்காதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.