உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பாசன வாய்க்கால் ஆக்கிரமிப்பு அகற்றிக்கொள்ள நோட்டீஸ்

பாசன வாய்க்கால் ஆக்கிரமிப்பு அகற்றிக்கொள்ள நோட்டீஸ்

காட்டுமன்னார்கோவில் : காட்டுமன்னார்கோவில் அருகே பாசன வாய்க்காலில் ஆக்கிரமித்து, கட்டப்பட்ட தடுப்பு சுவரை அகற்ற வருவாய் துறை சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.காட்டுமன்னார்கோவில் அடுத்த செட்டிதாங்கல் ஊராட்சிக்குட்பட்ட மேலபூவிழுந்தநல்லுார் கிராமத்தில் பாசன வாய்க்காலில், தனிநபர் ஆக்கிரமித்து, தடுப்புச் சுவர் அமைத்துள்ளார். இதனால் 100 ஏக்கருக்கு மேல் பாசனம் பெறும் விளை நிலங்களில் தண்ணீர் பாய்ச்சுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.ஊராட்சி தலைவர் நடராஜன் மற்றும் விவசாயிகள் ஆக்கிரமிப்பை அகற்ற கோரி தாசில்தார் சிவக்குமாரிடம் புகார் அளித்தனர். அதனையடுத்து, தாசில்தார் சிவக்குமார் தடுப்பு சுவர் ஆக்கிரமிப்பை பார்வையிட்டு, அளவீடு பணி செய்ய உத்தரவிட்டார்.அதில், வாய்க்கால் ஆக்கிமிப்பு உறுதியான நிலையில், 15 நாட்களுக்குள் ஆக்கிரமிப்பை சம்மந்தப்பட்ட தனி நபர் அகற்றிக்கொள்ள வி.ஏ.ஓ., மூலம் நோட்டீஸ் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ