உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / எண்ணும் எழுத்தும் பயிற்சி முகாம்

எண்ணும் எழுத்தும் பயிற்சி முகாம்

ஸ்ரீமுஷ்ணம் : ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் உள்ள தொடக்க நிலை ஆசிரியர்களுக்கான எண்ணும் எழுத்தும் பயிற்சி முகாம் ஆதிதிராவிடர் நல துவக்கப்பள்ளி மற்றும் சி.எஸ்.ஜெயின் கல்லுாரியில் நடந்தது.முகாமிற்கு வட்டார வள மைய ஆசிரிய பயிற்றுனர் பரமசிவம் வரவேற்றார். மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன விரிவுரையாளர் வித்யா பயிற்சியை துவக்கி வைத்தார். வட்டார கல்வி அலுவலர்கள் மன்னர்மன்னன், இந்திரா, மேற்பார்வையாளர் குணசேகரன் ஆகியோர் பயிற்சியின் நோக்கம் குறித்து பேசினர். ஆசிரியர்கள் ஆரோக்கியராஜ், முத்தமிழ்ச்செல்வன், ராஜேந்திரன், ஜெயக்குமார், ரவி, இன்னாசி, ஆரோக்கிய ஹெலினா ஆகியோர் கருத்தாளர்களாக பங்கேற்று பயிற்சி அளித்தனர்.ஆசிரிய பயிற்றுனர்கள் பாலசுப்ரமணியன், ஏழுமலை ஏற்பாடுகளை செய்திருந்தனர். இதில் 200 க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்றனர். முடிவில் ஆதிதிராவிடர் நல துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயா நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை