உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பட்டா வழங்க எதிர்ப்பு: கலெக்டரிடம் மனு

பட்டா வழங்க எதிர்ப்பு: கலெக்டரிடம் மனு

கடலுார்: பட்டா வழங்கும் முடிவை கைவிட கோரி கிராம மக்கள் மனு அளித்தனர். இதுகுறித்து கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைகேட்பு கூட்டத்தில், பரங்கிப்பேட்டை ஒன்றியம், வடக்கு பிச்சாவரம் பகுதி மக்கள் அளித்த மனுவில்; இப்பகுதியில் அரசு புறம்போக்கு இடத்தில் பனைமரம், மாமரம், முந்திரி மரம், தென்னை நட்டு பராமரித்து வருகிறோம். இவைகள் மக்களின் வாழ்வாதாரமாக உள்ளது. மரங்களை அகற்றி விட்டு அந்த இடத்தில் மற்றொரு பகுதி மக்களுக்கு பட்டா வழங்கும் முடிவை மாவட்ட நிர்வாகம் கைவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை