உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  ஆட்சிமொழி சட்ட வாரம் கொண்டாட்டம்

 ஆட்சிமொழி சட்ட வாரம் கொண்டாட்டம்

கடலுார்: கடலுார் மாவட்டத்தில் ஆட்சிமொழி சட்டவாரம் வரும் 17 ம் தேதி முதல் கொண்டாடப்படவுள்ளது. கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பு: தமிழ் ஆட்சிமொழி சட்டம் இயற்றப்பெற்ற கடந்த, 1956ம் ஆண்டு, டிச.27,ம் தேதியை நினைவு கூறும் வகையில், ஆண்டு தோறும் ஆட்சிமொழி சட்டவாரம் கொண்டாட அரசு ஆணையிட்டுள்ளது. அதனடிப்படையில் மாவட்டத்தில் வரும், 17ம் முதல் வரும், 26ம் தேதி வரை ஆட்சிமொழி சட்டவாரம் கொண்டாடப்பெறவுள்ளது. இதையொட்டி கணினி் தமிழ் விழிப்புணர்வு கருத்தரங்கம், ஆட்சிமொழி மின்காட்சியுரை, தமிழில் குறிப்புகள், வரைவுகள் எழுதுவதற்கான பயிற்சி, வணிக நிறுவனங்களில் தமிழில் பெயர்ப்பலகைகள் அமைக்க வலியுறுத்தி உரிமையாளர்கள், வணிக நிறுவன அமைப்புகளுடன் கூட்டம், பட்டிமன்றம், ஆட்சிமொழித் திட்ட விளக்கக் கூட்டம், விழிப்புணர்வுப் பேரணி ஆகியவை நடைபெற உள்ளன. தமிழக அரசு வாரியங்கள், கழகங்கள், அரசு உதவிபெறும் அமைப்புகள், தன்னாட்சி நிறுவனங்கள் ஆகியவற்றில் பணியாற்றும் அலுவலர்கள், பணியாளர்கள், பேராசிரியர்கள், ஆசிரியர்கள், பள்ளி கல்லுாரி மாணவர்கள், தமிழ் அமைப்புகள், தமிழறிஞர்கள், தமிழார்வலர்கள், வணிகர்கள், வணிகர் சங்கங்கள் பங்கேற்கலாம். இவ்வாறு அதில் தெரிவிக்ககப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை