உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மங்களூர், நல்லுார் ஒன்றியங்களை பிரிக்காததால் அதிகாரிகள்... திணறல்!வளர்ச்சி திட்டம் கிடப்பில் போடப்பட்டதால் மக்கள் ஏமாற்றம்

மங்களூர், நல்லுார் ஒன்றியங்களை பிரிக்காததால் அதிகாரிகள்... திணறல்!வளர்ச்சி திட்டம் கிடப்பில் போடப்பட்டதால் மக்கள் ஏமாற்றம்

கடலுார் மாவட்டத்தின் கடைக்கோடியிலுள்ள மங்களூர், நல்லூர் ஒன்றியங்களில்130ஊராட்சிகளும் மற்றும் 200க்கும் அதிகமான துணை கிராமங்களும் உள்ளன. இதில், மங்களூர் ஒன்றியத்தில்,131.9ச.கி.மீ., பரப்பளவில் 66 ஊராட்சிகள் உள்ளன. பழங்குடியினர் உட்பட1.48 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர். இங்கு 24 ஒன்றிய கவுன்சிலர்கள், 2 மாவட்ட கவுன்சிலர்கள் மக்கள் பிரதிநிதிகள் தேர்வு செய்யப்படுகின்றனர். நல்லுார் ஒன்றியத்தில்,130.0ச.கி.மீ., பரப்பளவில் 64 ஊராட்சிகள் உள்ளன. பழங்குடியினர் உட்பட1.39லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர். இங்கு, 21 ஒன்றிய கவுன்சிலர்கள், 2 மாவட்ட கவுன்சிலர்கள் மக்கள் பிரதிநிதிகள் தேர்வு செய்யப்படுகின்றனர். இப்பகுதி மக்கள் விவசாயம் மற்றும் அதை சார்ந்த தொழில்களை பிரதானமாக கொண்டு வருவாய் ஈட்டி வருகின்றனர். திணறும் அதிகாரிகள் ஊரக வளர்ச்சி துறை சார்பில், ஊராட்சிகள் தோறும் தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டம், கான்கிரீட் வீடுகள், சாலை, கழிவுநீர் வடிகால், குடிநீர், சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் உள்ளிட்ட வளர்ச்சி திட்டப்பணிகள் செயல்படுத்தப்படுகின்றன. துாரம் காரணமாக ஊராட்சிகளில் நடைபெறும் திட்டப்பணிகளை அதிகாரிகளால் கண்காணிக்க முடியவில்லை. மேலும், அதிக ஊராட்சிகளை கொண்டுள்ளதால் புதிய திட்டப்பணிகளுக்கு போதிய நிதி ஒதுக்கீடு செய்யமுடியவில்லை. மேலும் ஊழியர்களுக்கு முறையாக சம்பளம் வழங்க முடியாமல், அதிகாரிகள் திணறி வருகின்றனர். 30 ஆண்டு கோரிக்கை மங்களூர், நல்லுார்பி.டி.ஓ., அலுவலகத்திற்கு, வேலைவாய்ப்பு விண்ணப்பம், குடிநீர், சாலை உள்ளிட்ட அடிப்படை பிரச்னைகள் குறித்து மனு அளிக்க தினசரி ஏராளமான மக்கள் குவிகின்றனர். அதில், திட்டக்குடியை சுற்றியுள்ளவர்கள்,28 கி.மீ., துாரம் பயணித்து மங்களூர்பி.டி.ஓ., அலுவலகத்திற்கும், பெண்ணாடத்தை சுற்றியுள்ளவர்கள்,30 கி.மீ., துாரம் பயணித்து நல்லுார்பி.டி.ஓ., அலுவலகத்திற்கும், வர வேண்டியுள்ளது. சில சமயங்களில், அதிகாரிகள் இல்லாத போது தங்களின் ஒருநாள் வருவாய் இழந்து பலகி.மீ., துாரம் பயணித்து நீண்ட நேரம் காத்திருந்து, மனுக்களை வழங்க முடியாமல் திரும்ப செல்ல வேண்டியுள்ளதால் மக்கள் மன உளைச்சல் அடைகின்றனர். இதனால், மங்களூர், நல்லுார் ஒன்றியங்களை பிரிக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கடந்த, 30 ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன் விருத்தாசலம், மங்களூர், நல்லுார் ஒன்றியங்களை சேர்ந்த,181ஊராட்சிகளை நிர்வாக ரீதியாக பிரிக்க, வரையறையை அதிகாரிகள் தயார் செய்தனர். அதில், விருத்தாசலம் 46; மங்களூர் 33; நல்லுார் 32 ஊராட்சிகளும், புதிய ஒன்றியங்களாக வேப்பூர் 29; திட்டக்குடி 41; ஊராட்சிகளும் கொண்டு வரையறை தயார் செய்து மாவட்ட நிர்வாகத்திற்கு அனுப்பினர். இதனால், மக்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருந்தனர். பெரும் ஏமாற்றம் இந்நிலையில், திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, ராமநாதபுரம் மாவட்டங்களில் புதிய ஒன்றியங்களை அரசு அறிவித்தது. அதில், பல்லாண்டு கோரிக்கையான மங்களூர், நல்லுார் ஒன்றியங்களை பிரிக்கும் அறிவிப்பு இல்லாததால் மக்கள் பெருத்த ஏமாற்றமடைந்தனர். இந்நிலையில், மாவட்டத்தின் கடைக்கோடி மக்களின் வாழ்வாதாரம் வளர்ச்சி அடைந்து, தன்னிறைவு பெற தமிழக அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே அனைத்து தரப்பினரின் எதிர்பார்ப்பாக உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ