உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  மூதாட்டி மாயம்

 மூதாட்டி மாயம்

விருத்தாசலம்: மாயமான மூதாட்டியை போலீசார் தேடி வருகின்றனர். விருத்தாசலம் அடுத்த தொரவளூர் புதுகாலனியை சேர்ந்தவர் வெங்கடேசன் மனைவி சின்னபிள்ளை, 70; நேற்று முன்தினம் காலை 6:30 மணியளவில், சென்னையில் உள்ள மகள் வீட்டிற்கு செல்வதாக கூறி புறப்பட்டவர், அங்கு செல்லவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. அவரது மகன் சிவக்குமார் புகாரின் பேரில், விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து மூதாட்டியை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை