உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சூதாட்டம் ஒருவர் கைது

சூதாட்டம் ஒருவர் கைது

நடுவீரப்பட்டு; நடுவீரப்பட்டு பகுதியில் காசு வைத்து சூதாடியவரை போலீசார் கைது செய்தனர். 5 பேரை தேடி வருகின்றனர்.நடுவீரப்பட்டு சப் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, நரியங்குப்பம் ஓடையில் காசு வைத்து சூதாடுவதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அங்கு சூதாடிய சஞ்சீவிராயன் கோவில் தெருவை சேர்ந்த ராமச்சந்திரன், 56; என்பவரை கைது செய்தனர்.தப்பியோடிய அதே பகுதியை சேர்ந்த ராமு, கச்சிராயர்குப்பம் செல்வ ராஜ், ராணிப்பேட்டை முருகன், நைனாப்பேட்டை செந்தில், கடலுார் கண்ணன் ஆகிய 5 பேரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ