உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / குட்கா விற்பனை; ஒருவர் கைது

குட்கா விற்பனை; ஒருவர் கைது

விருத்தாசலம் ; விருத்தாசலம் அருகே பெட்டிக்கடையில் குட்கா விற்றவரை போலீசார் கைது செய்தனர்.விருத்தாசலம் சப் இன்ஸ்பெக்டர் சந்துரு தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் காலை ரோந்து சென்றபோது, பரவளூர் பஸ் நிறுத்தம் அருகே உள்ள கடைகளில் சோதனை செய்தனர். அதில், அங்குள்ள பெட்டிக்கடையில் ஹான்ஸ் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்வது உறுதியானது.தொடர்ந்து, பரவளூரை சேர்ந்த ராமசாமி மகன் துரைசாமி, 64, என்பவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்த குட்கா பொருட்களை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி