உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / அரசு உயர்நிலைப்பள்ளியில் கூடுதல் கட்டடங்கள் திறப்பு

அரசு உயர்நிலைப்பள்ளியில் கூடுதல் கட்டடங்கள் திறப்பு

கடலுார்: குறிஞ்சிப்பாடி, பெரியக்குப்பம் அரசு உயர்நிலைப்பள்ளியில் 2.79 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கூடுதல் கட்டட திறப்பு விழா நடந்தது. அரசுப்பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கையினை அதிகரிக்கும் நோக்கில், பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகிறது. மாணவர்கள் போதிய இடவசதியுடன் கல்வி கற்றிடும் பொருட்டு கூடுதல் வகுப்பறை கட்டடங்கள் கட்டப்பட்டு வருகிறது. அந்த வகையில், குறிஞ்சிப்பாடி அருகே பெரியக்குப்பம் அரசு உயர்நிலைப் பள்ளியில், 10 வகுப்பறை, 1 அறிவியல் ஆய்வகம் மற்றும் 2 கழிப்பறை கட்டடம் என தரைதளம், முதல்தளம் மற்றும் இரண்டாம் தளங்களுடன், 703.50 ச.மீ பரப்பளவில் 500 மாணவர்கள் பயன்பெறும் வகையில் கூடுதல் கட்டடங்கள் கட்டப்பட்டன. அதற்கான திறப்பு விழா நேற்று நடந்தது. அதில் அமைச்சர் பன்னீர்செல்வம் பங்கேற்று திறந்து வைத்தார். கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் முன்னிலை வகித்தார். இந்நிகழ்ச்சியில் செயற்பொறியாளர், பொதுப்பணித்துறை (கட்டடம்) சிவசங்கர நாயகி, மாவட்ட கல்வி அலுவலர் இஸ்மாயில்,தி.மு.க., ஒன்றிய செயலாளர் சிவக்குமார், அம்பலவாணன்பேட்டை முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ராமச்சந்திரன், துறை சார்ந்த அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை