உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / நகர்புற சுகாதார நிலையம் திறப்பு

நகர்புற சுகாதார நிலையம் திறப்பு

நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பத்தில் நகர்புற ஆரம்ப சுகாதார நிலைய திறப்பு விழா நடந்தது.நெல்லிக்குப்பம் நகராட்சி முஸ்லீம் மேட்டு தெருவில் 25 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்தை காணொளி காட்சி வாயிலாக தமிழக முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.இதனையொட்டி சுகாதார வளாகத்தில் நடந்த விழாவில் சேர்மன் ஜெயந்தி குத்துவிளக்கேற்றினார். துணைத் தலைவர் கிரிஜா, கமிஷனர் கிருஷ்ணராஜன், டாக்டர் ராம்குமார், பணி மேற்பார்வையாளர் ரமேஷ், தி.மு.க., நகர செயலாளர் மணிவண்ணன், வி.சி., நகர செயலாளர் திருமாறன், தி.மு.க., மாவட்ட பிரதிநிதி கதிரேசன், இளைஞரணி செயலாளர் அனீஸ்குமார், விஜயகுமார், கஜேந்திரன்,கவுன்சிலர்கள் இக்பால், ஆனந்தராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி