நிர்வாக அலுவலகம் திறப்பு
மந்தாரக்குப்பம்; நெய்வேலி அர்-ரஹ்மத் மெட்ரிக் பள்ளியில் புதிய நிர்வாக அலுவலக கட்டடம் திறப்பு விழா நடந்தது. பள்ளிவாசல் துணைத் தலைவர் அபுபக்கர் சித்திக் தலைமை தாங்கினார். பள்ளி வாசல் பொருளாளர் அப்துல்சமத், அன்வர்தீன் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமை ஆசிரியர் ஈவாஜாஸ்மின் வரவேற்றார். புதிய கட்டடத்தை மஸ்ஜிதே ரஹ்மத் பள்ளி வாசல் தலைவர் மதார்ஷா திறந்து வைத்து பேசினார். நிர்வாக குழு உறுப்பினர்கள் மொய்தீன், ரியாஸ்ரகுமான், ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர். ஆசிரியர் ரஞ்சித்குமார் நன்றி கூறினார்.