கொளஞ்சியப்பர் கோவிலில் உண்டியல் திறப்பு
விருத்தாசலம் : கொளஞ்சியப்பர் கோவிலில் உண்டியல்கள் திறந்து காணிக்கை எண்ணும் பணி நடந்தது. விருத்தாசலம் அடுத்த மணவாளநல்லுார் கொளஞ்சியப்பர் கோவிலில் உள்ள 8 நிரந்தர உண்டியல்களை திறந்து காணிக்கை எண்ணும் பணி நேற்று நடந்தது. ஹிந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் சந்திரன் முன்னிலையில் கோவில் ஊழியர்கள், தன்னார் வலர்கள் பங்கேற்றனர். அதில், 17 லட்சத்து 32 ஆயிரத்து 451 ரொக்கம், 22 கிராம் தங்கம், 1,302 கிராம் வெள்ளிப் பொருட்கள் இருந்தன. செயல் அலுவலர் பழனியம்மாள், ஆய்வாளர் பிரேமா, மேலாளர் செல்வகுமாரி உடனிருந்தனர்.