தாய், சேய் மையம் திறப்பு
புவனகிரி : கீரப்பாளையத்தில் கட்டி முடிக்கப்பட்ட தாய், சேய் மையம் 'தினமலர்' செய்தி எதிரொலியால் திறந்து வைக்கப்பட்டது. கீரப்பாளையத்தில், ஒரத்தூர் ஆரம்ப சுகாதார நிலையத்தின் கட்டுப்பாட்டில் தாய்,சேய் மையம் இயங்கியது. கட்டடம் இடிந்து விழுந்ததால் பாதுகாப்பு கருதி வாடகை கட்டடத்திற்கு இடமாற்றம் செய்தனர். அதனைத் தொடர்ந்து, சுகாதாரத் துறை சார்பில் 20 லட்சம் ரூபாய் செலவில் புதிதாக தாய், சேய் நல மையம் கட்டப்பட்டது. ஆனால், இது திறக்கப்படாமல் இருந்தது. இதுகுறித்து 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானது. அதனைத் தொடர்ந்து, தாய், சேய் நல மையம் திறந்து வைக்கப்பட்டது. நிகழ்ச்சியில், சுகாதார செவிலியர் மூகாம்பிகை, வீரமணி, ஒன்றிய செயலாளர்கள் சபாநாயகம், பாலு, வட்டார மருத்துவ அலுவலர் சிவப்பிரகாசம், ஊராட்சி செயலர் தங்கமுருகவேல் பங்கேற்றனர்.