உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / அணைக்கட்டு பாசன வாய்க்காலில் சம்பா சாகுபடிக்கு தண்ணீர் திறப்பு

அணைக்கட்டு பாசன வாய்க்காலில் சம்பா சாகுபடிக்கு தண்ணீர் திறப்பு

சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு வெள்ளாறு அணைக்கட்டு பாசனப்பிரிவின் கீழ் உள்ள வெள்ளாறுராஜன் வாய்க்கால் வழியாக பாசனத்திற்கு தண்ணீர் திறந்து வைக்கப்பட்டது. சேத்தியாத்தோப்பு அடுத்த வீராணம் ஏரியில் இருந்து பூதங்குடி வி.என்,எஸ்., மதகில் வெளியேற்றப்படும் உபரி நீர் வெள்ளாறு அணைக்கட்டில் தேக்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த தண்ணீரை சம்பா பருவ நாற்றுவிடும் பணிக்காக புவனகிரி, பரங்கிப்பேட்டை, புதுச்சத்திரம், அரியகோஷ்டி உள்ளிட்ட டெல்டா கடைமடை பகுதிகளுக்கு பாசனத்திற்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டது. அதன்படி, சிதம்பரம் கோட்ட பொதுப்பணித் துறை செயற்பொறியாளர் காந்தரூபன் அறிவுறுத்தல்படி, வெள்ளாறு அணைக்கட்டு பாசன பிரிவு உதவி பொறியாளர் படைகாத்தான் சேத்தியாத்தோப்பு வெள்ளாறு ராஜன் வாய்க்காலின் ஏடிசி மதகு, பழைய முரட்டு வாய்க்கால், அரியகோஷ்டி மதகு வழியாக பாசனத்திற்கு தண்ணீர் திறந்து வைத்தார். வாய்க்கால் பாசன சங்க தலைவர்கள் நடராஜன், சரவணன், தன்ராஜ், நிர்வாகிகள் சக்கரவர்த்தி, கார்த்தி, ராதாகிருஷ்ணன், ரவி, கோதண்டராமன், விஜயன், கருணாமூர்த்தி, ராஜேந்திரன், சங்கர் உடனிருந்தனர். இதன் மூலமாக 22,000 ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை