மேம்பாலம் கட்டுமானப் பணி தரக்கட்டுப்பாடு அதிகாரி ஆய்வு
கடலுார் : கடலுார் கெடிலம் ஆற்றில் கட்டப்பட்டு வரும் மேம்பாலத்தை தரக்கட்டுப்பாடு அதிகாரிகள் நேற்று பார்வையிட்டனர். சென்னை - கடலுார் கிழக்கு கடற்கரை சாலை முழுதும் இரட்டை சாலையாக மாற்றப்பட்டு வருவதால் திருப்பாதிரிப்புலியூர் கெடிலம் ஆற்றில் உள்ள அண்ணா மேம்பாலத்திற்கு மாற்றாக மற்றொரு பாலம் கட்டப்பட்டு வருகிறது. இந்த பாலத்தை நேற்று தேசிய நெடுஞ்சாலை மற்றும் தரக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இயக்குநர் சரவணன், தரக்கட்டுப்பாடு கோட்ட பொறியாளர் ஸ்ரீகாந்த், சந்திரசேகர், கோட்ட பொறியாளர் அம்பிகா, மணிவண்ணன், உதவி கோட்ட பொறியாளர் ஸ்ரீதேவி பங்கேற்றனர்.