பாதயாத்திரை பாக்தர்கள் காவடி ஊர்வலம்
விருத்தாசலம்: சின்னவடவாடியில் பழனி பாதயாத்திரை பக்தர்களின் காவடி ஊர்வலம் நடந்தது. விருத்தாசலம் அடுத்த சின்னவடவாடியில் பழனி பாதயாத்திரை பக்தர்களின் 14ம் ஆண்டு காவடி ஊர்வலம் நேற்று முன்தினம் நடந்தது. இதையொட்டி திரவுபதியம்மன் கோவில் வளாகத்தில் உள்ள முருகன் சுவாமிக்கு காலை 7:00 மணிக்கு அபிேஷக ஆராதனை, காலை 10:00 மணிக்கு தீபாராதனை நடந்தது. அதைத்தொடர்ந்து, காலை 11:00 மணியளவில் பாதயாத்திரை பக்தர்கள் சின்னவடவாடி குளக்கரையில் இருந்து பால், இளநீர் காவடி எடுத்து முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக சென்றனர். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமி தரினசம் செய்தனர்.