உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கமிட்டியில் நெல் மூட்டைகள் தேக்கம் : விவசாயிகள் கவலை

கமிட்டியில் நெல் மூட்டைகள் தேக்கம் : விவசாயிகள் கவலை

விருத்தாசலம் : விருத்தாசலம் கமிட்டியில் இ-நாம் திட்டத்தில் பணம் செலுத்தும் நடைமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்து, கடந்த மூன்று நாட்களாக வியாபாரிகள் ஏலத்தை புறக்கணித்துள்ளதால், நெல் மூட்டைகள் தேக்கமடைந்துள்ளன. விருத்தாசலம் மார்க்கெட் கமிட்டியில் கொள்முதல் செய்யப்படும் நெல், மக்காச்சோளம், வேர்க்கடலை உள்ளிட்ட வேளாண் விளைபொருட்களுக்கு உரிய தொகையை வியாபாரிகளிடம் இருந்து பெற்று, மார்க்கெட் கமிட்டி நிர்வாகம் சார்பில் விவசாயிகளுக்கு பட்டுவாடா செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில், இ-நாம் திட்டத்தின் கீழ், பண பட்டுவாடாவில் ஏற்படும் குளறுபடிகளை தவிர்க்கும் வகையில், விளைபொருட்களுக்கு உரிய தொகையை வியாபாரிகளே நேரடியாக ஆன்லைன் மூலம் விவசாயிகளுக்கு வழங்க அறிவுறுத்தப்பட்டது. இதனையேற்காத வியாபாரிகள், கடந்த மூன்று நாட்களாக ஏலத்தில் பங்கேற்காமல், கொள்முதல் பணியை புறக்கணித்து வருகின்றனர். இதனால், நெல் மூட்டைகள் உள்ளிட்ட வேளாண் விளைபொருட்கள் மார்க்கெட் கமிட்டியில் தேக்க மடைந்துள்ளன. இதனால், வேளாண் விளைபொருட்களை கொண்டு வந்த விவசாயிகள் கவலையடைந் துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி