உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மருங்கூரில் நீரில் மூழ்கிய நெற்பயிர்கள் : விவசாயிகள் கவலை

மருங்கூரில் நீரில் மூழ்கிய நெற்பயிர்கள் : விவசாயிகள் கவலை

விருத்தாசலம்: மருங்கூர் கிராமத்தில் சாகுபடி செய்யப்பட்ட நெற் பயிர்கள் நீரில் மூழ்கியதால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். கடலுார் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் மாவட்டத்திற்கு 'ரெட் அலர்ட்' விடுக்கப்பட்டிருந்தது. இதன்காரணமாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்தது. அதேபோல், விருத்தாசலம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் கனமழை பெய்தது. இதன் காரணமாக, கருவேப்பிலங்குறிச்சி அடுத்த மருங்கூரில் சாகுபடி செய்யப்படுள்ள சம்பா நெற்பயிர்கள் நீரில் மூழ்கி உள்ளன. இதனால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். மேலும், இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், மருங்கூர் ஏரி வாய்க்கால் துார் வாராததால், சாகுபடி நிலங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதுகுறித்து, அதிகாரிகளிடம் முறையிட்டோம். ஆனால் எவ்வித நடவடிக்கையும் இல்லை. இதனால், நாங்களே சொந்த செலவில் ஜே.சி.பி., இயந்திரம் மூலம், நெற் பயிர்களை காப்பாற்ற,வாய்க்கால் துார்வாரும் பணியில் ஈடுபட்டுள்ளோம் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !