உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  நெல் கொள்முதல் நிலையம் திறப்பு

 நெல் கொள்முதல் நிலையம் திறப்பு

நெல்லிக்குப்பம்: நெல் கொள்முதல் நிலையம் திறப்பு நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். நெல்லிக்குப்பத்தில் தமிழக அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டது. குறுவை, சம்பா, தாளடி என ஒவ்வொரு பருவத்துக்கும் கொள்முதல் நிலையம் செயல்பட்டது. தனியார் வியாபாரிகள் சிண்டிகேட் அமைத்து விவசாயிகளிடம் இருந்து குறைந்த விலைக்கு நெல்லை வாங்கி வந்தனர். கடந்த 4 ஆண்டுகளாக அரசின் கொள்முதல் நிலையம் செயல்பட்டதால் விவசாயிகள் தனியார் வியாபாரிகளை நம்பாமல் அரசின் நெல் கொள்முதல் நிலையத்தில் நெல்லை விற்பனை செய்தனர். இதனால் மூட்டைக்கு 500 ரூபாய் வரை கூடுதலாக விவசாயிகளுக்கு கிடைத்தது. தற்போது சம்பாபட்ட நெல் அறுவடை துவங்கியுள்ளது. நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திறக்க கலெக்டரிடம் விவசாயிகள் வலியுறுத்தினர். இந்நிலையில், நேற்று நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது. விவசாய சங்க தலைவர் ராமானுஜம், ராமலிங்கம், நந்தகோபால், அன்பு உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை