நெல் கொள்முதல் நிலையம் திறப்பு
ராமநத்தம்: தொழுதுாரில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது. தொழுதுார் மற்றும் அதனை சுற்றியுள்ள, 20க்கும் மேற்பட்ட கிராமங்கள், வெள்ளாற்றையொட்டி அமைந் துள்ளன. இதன் மூலம் கிடைக்கும் நீர்ப்பாசனத்தில் நெற்பயிர்களை விவசாயிகள் சாகுபடி செய்கின்றனர். இதனால், அரசு நெல் கொள்முதல் நிலையம் அமைக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். தொடர்ந்து, தொழுதுாரில், அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது. அப்போது, கிராம மக்கள், விவசாயிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.