பாலமுருகன் கோவிலில் 10ம் தேதி பங்குனி உத்திரம்
புதுச்சத்திரம்: புதுச்சத்திரம் பாலமுருகன் கோவிலில் வரும் 10 ம் தேதி பங்குனி உத்திர திருவிழா நடக்கிறது. புதுச்சத்திரம் பாலமுருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் காலை 10:00 மணிக்கு பாலமுருகன் சுவாமிக்கு பால், தயிர், சந்தனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் கொண்டு, அபிஷேக ஆராதனை நடக்கிறது.தொடர்ந்து பாலமுருகன் சிறப்பு அலங்காரத்தில் அலங்கரிக்கப்பட்டு, மகா தீபாராதனை நடக்கிறது. சிறப்பு விழாவான பங்குனி உத்திர திருவிழாவையொட்டி வரும் 10ம் தேதி காலை 5:00 மணிக்கு பாலமுருகனுக்கு அபிஷேக ஆராதனை செய்து, 8:00 மணிக்கு சாமியார்பேட்டை கடற்கரையில் இருந்து, காவடி உற்சவம் நடக்கிறது.