பங்குனி உத்திரம்
பண்ருட்டி: சிறுவத்துார் பாலமுருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா நடந்தது. பண்ருட்டி அடுத்த சிறுவத்துார் பாலமுருகன் கோவிலில் 75ம் ஆண்டு பங்குனி உத்திர திருவிழா நேற்று முன்தினம் நடந்தது. அன்று காலை 7:00 மணிக்கு பாலமுருகன் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள் நடந்தது. தொடர்ந்து, அம்மனிடம் சக்திவேல் பெரும் நிகழ்ச்சி, வேல் காவடி ஊர்வலம், ராட்ச அலகு, ஆகாய செடல் போடுதல் நடந்தது. பால்,பன்னீர், மஞ்சள்,சந்தனம், மிளகாய் பொடி உள்ளிட்ட அபிஷேகம் நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர்.