உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கோனோவீடரில் களையெடுக்க பெண்ணாடம் விவசாயிகள் ஆர்வம்

கோனோவீடரில் களையெடுக்க பெண்ணாடம் விவசாயிகள் ஆர்வம்

பெண்ணாடம்: பெண்ணாடம் மற்றும் அரியராவி, மாளிகைக்கோட்டம், துறையூர், சவுந்திரசோழபுரம், கிளிமங்கலம், குருக்கத்தஞ்சேரி, கணபதிகுறிச்சி, பெலாந்துறை, கொத்தட்டை, கொசப்பள்ளம், இருளம்பட்டு உட்பட 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு முன்பட்டத்தில் சம்பா நடவு பணி மேற்கொண்டனர்.தற்போது நெற்பயிர்கள் செழிப்பாக வளர்ந்த நிலையில், பயிர்களுக்கு இடையே வளரும் புற்செடிகளை கூலி ஆட்கள்மூலம் களையெடுப்பது வழக்கம். ஆனால் கூலி ஆட்கள் தட்டுப்பாடு காரணமாக பெண்ணாடம் பகுதி கிராம விவசாயிகள் கோனோவீடர் மூலம் களையெடுக்கும் பணியில் ஆர்வம் காட்டிவருகின்றனர்.மாளிகைக்கோட்டம் விவசாயி ஒருவர் கூறுகையில், 'பெண்ணாடம் பகுதியில் நெல் நடவுக்கு கூலி ஆட்கள் பற்றாக்குறை உள்ளது. இதனால் பலர் இயந்திரம் மூலம் ஒற்றை நாற்று நடவுக்கு மாறி வருகின்றனர். செலவும் குறைகிறது. இதேபோன்று நெற்பயிர்களுக்கு களையெடுக்கவும் ஆட்கள் பற்றாக்குறையால் கோனோவீடர் மூலம் களையெடுக்கிறோம். மணிக்கு 100 ரூபாய் செலவாகிறது. கோனோவீடர் இயந்திரத்தை பயன்படுத்தி களை எடுக்க ரூ.1,500 முதல் 2,000 ரூபாய் வரை செலவாகிறது' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை