உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பள்ளிகளில் உளவியல் ஆலோசனை திட்டம் செயல்படுத்த பெற்றோர்கள் கோரிக்கை

பள்ளிகளில் உளவியல் ஆலோசனை திட்டம் செயல்படுத்த பெற்றோர்கள் கோரிக்கை

பள்ளிகளில் உளவியல் ஆலோசனை திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு பல்வேறு திட்டங்கள், நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன. இந்நிலையில் வளர் இளம் பருவத்தில் உள்ள மாணவர்கள் பல்வேறு சூழ்நிலைகளால் உளவியல் ரீதீயான பாதிப்புகளுக்கு ஆளாகின்றனர். இதனால், மாணவர்கள் கல்வியில் பின்தங்கி இருப்பதோடு தவறான வழிகளையும் தேர்ந்தெடுக்கின்றனர். இப்பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகை யில் பள்ளிகளில் உளவியல் ஆலோசனை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டது.அதைத் தொடர்ந்து பள்ளிகளில் உளவியல் ஆலாசகர்கள் நியமிக்கப்பட்டு மாணவர்களுக்கு பல்ேவறு ஆலோசனைகள் வழங்கினர். மேலும் வளர் இளம் பருவத்தினர் உள்ள மாணவர்கள் தவறான வழிகளில் செல்வது தவிர்ப்பது, பல்வேறு சூழ்நிலைகளில் உளவியல் ரீதியான பாதிப்புகள், கற்றலில் கவனத்துடன் இருப்பது என மாணவர்களை நல்வழிப்படுத்துவதற்கான திட்டமாக இருந்து வந்தது.மேலும். மாணவர்களின் மனநிலையை அறிந்து கொள்வதற்கான நல்ல வாய்ப்பாக இருந்து வந்தது. ஆனால் இத்திட்டத்தை பள்ளிகளில் முறையாக செயல்படுத்தவில்லை.இந்நிலையில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் மாணவர்களுக்கு உளவியல் ரீதியான ஆலோசனை திட்டத்தை மீண்டும் செயல்படுத்தி, அதற்கு என தனியாக உளவியல் ஆலோசகரை நியமித்து தொடர்ந்து மாணவர்களை கண்காணிக்க வேண்டும் என பெற்றோர்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை