உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பரிமள ரங்கநாதர் கோவில் கும்பாபிஷேக விழா

பரிமள ரங்கநாதர் கோவில் கும்பாபிஷேக விழா

பெண்ணாடம்; பெண்ணாடம், கருங்குழி தோப்பு பரிமள ரங்கநாத பெருமாள் கோவிலில் நேற்று கும்பாபிஷேகம் நடந்தது.இக்கோவிலில் கும்பாபிஷேக விழா கடந்த 9ம் தேதி, முதல்கால யாகசாலை பூஜையுடன் துவங்கியது. நேற்று விஸ்வரூபம், பெருமாள் திருவாராதனம், நான்காம் கால ஹோமம் நடந்தது.காலை 6:55 மணியளவில் கும்ப பெருமாள் புறப்பாடு, 7:15 மணியளவில் கோபுர கலசத்தில் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. 7:45 மணியளவில் திருவாராதனம், வேத திவ்ய பிரபந்த சாற்றுமுறை நடந்தது. இன்று 11ம் தேதி முதல் மண்டலாபிஷேகம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ