உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பயணிகள் நிழற்குடை திறப்பு

பயணிகள் நிழற்குடை திறப்பு

புவனகிரி: கீரப்பாளையம் ஒன்றியம் பூங்குடியில் பஸ் நிழற்குடை, வீரசோழகன் மற்றும் வன்னியூரில் கரும காரிய காத்திருப்பு கூடங்களை, அருண்மொழித்தேவன் எம்.எல்.ஏ., திறந்து வைத்தார்.நிகழ்ச்சிக்கு ஒன்றிய செயலாளர் விநாயகம் தலைமை தாங்கினார். மாவட்ட ஜெ., பேரவை செயலாளர் உமாமகேஸ்வரன், மாவட்ட மாணவரணி வீரமூர்த்தி, மாவட்ட தொழில்நுட்ப பிரிவு புருஷோத்தமன், ஊராட்சி தலைவர் அன்பழகன் முன்னிலை வகித்தனர். கிளை செயலாளர் சிவக்குமார் வரவேற்றார். அருண்மொழிதேவன் எம்.எல்.ஏ., சிறப்பு விருந்தினராக பங்கேற்று, தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் பூங்குடியில் ரூ.4 லட்சம் செலவில் பயணியர் நிழற்குடை, வீரசோழகன் மற்றும் வன்னியூரில் தலா ரூ.6 லட்சம் செலவில் கரும காரிய காத்திருப்பு கூடம் ஆகியவற்றை திறந்து வைத்தார். துப்புரவு பணியாளர்களுக்கு உதவிகள் வழங்கினார். அ.தி.மு.க., மாணவரணி சிவஞானம் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி