மேலும் செய்திகள்
குடிநீர் கேட்டு மறியல்
04-May-2025
விருத்தாசலம்: விருத்தாசலம் பி.டி.ஓ., அலுவலகத்தை காலி குடங்களுடன் கிராம மக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு நிலவியது.விருத்தாசலம் அடுத்த புலியூர் ஊராட்சி, கன்னியங்குப்பம் கிராமத்தில் நுாற்றுக்கணக்கான குடும்பங்கள் உள்ளன. இங்குள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்த நிலையில், கடந்த சில வாரங்களாக கலங்கலான நிலையில் தண்ணீர் வந்துள்ளது. இது குறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை கூறியும் நடவடிக்கை எடுக்கவில்லை.இதைக் கண்டித்து, விருத்தாசலம் பி.டி.ஓ., அலுவலகத்தை நேற்று மதியம் 1.00 மணிக்கு கிராம மக்கள் 25க்கும் மேற்பட்டோர் காலி குடங்களுடன் முற்றுகையிட்டனர். இவர்களை பி.டி.ஓ.,க்கள் சங்கர், லட்சுமி, இன்ஸ்பெக்டர் கவிதா ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்தனர். ஓரிரு நாட்களில் குடிநீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணப்படும் என உறுதி அளித்ததையேற்று, அனைவரும் கலைந்து சென்றனர்.
04-May-2025